முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிவலைக்குள் டாக்டர்களின் ஏமாற்று வேலைகள்..!!!

Subbiahpatturajan
 Doctors' scams within the web of corporate companies .. !!!
கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிவலைக்குள் டாக்டர்களின் ஏமாற்று வேலைகள்..!!!
பாருங்க நாம இவ்வளவு நாள் என்ன நினைச்சோம் B.P. யின் அளவு 70-140.... 
70 கீழ போனா  Low B.P 140க்கு மேல போன High B.P ன்னு.. நினைச்சோம் ... அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்டாங்க ....
 இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது.... 
ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை மாத்தி அமைச்சி இருக்காங்க 😣😣😣... 
அதாவது இனிமே 130க்கு மேல High B.P.. 80க்கு கீழ இருந்த Low B.P... 😳😳
இதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வரையரை செய்து இருக்கு .. 
இதன் மூலம் மேலும் 3 கோடி பேர் அமெரிக்காவில் மட்டும் கூடுதலா மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டாகணும்... 
அனைத்துக்கும் அமெரிக்காவை உதாரணம் காண்பிக்கும் நம்ம ஊர் டாக்டர்கள் இதை அப்படியே உங்கள் கிட்ட சொல்லி உங்களை B.P. பேசண்டா மாத்துவாங்க ... 
கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிவலைக்குள் டாக்டர்களின் ஏமாற்று வேலைகள்..!!!
பின்ன எப்படிங்க மருந்து கம்பெனிகள் கிட்ட இருந்து கமிஷன் வரும்...                    

உண்மையை சொல்லனும்னா நானும் மருந்து கம்பெனியில் sales man ஆ இருந்த அனுபவத்தை வைத்து இந்த கட்டுரையை எழுதி முடிக்கிறேன்.                                         நான் சேல்ஸ்மேன் ஆ இருந்தபோது எனக்கு டாஸ்க் கொடுக்கப்படும் என்னவென்றால் இந்த மருந்தை இவ்வளவு விற்று கொடுத்தால் அதில் டாக்டர்களுக்கு கமிஷன் போக சுற்றுலா செல்ல டாக்டர்களுக்கு கம்பெனிகளே ஏற்பாடு செய்து கொடுக்கும். 

எல்லா டாக்டரையும் நாம் குறை சொல்ல வரவில்லை.                                                    ஒரு சில டாக்டர்கள் என்ன செய்வார்கள் என்றால் உங்களுக்கு வேண்டுமென்றே ஸ்கேன் எடுத்துப் பார்க்கணும்... எக்ஸ்ரே எடுத்து பார்க்கணும்... இந்த டானிக்கை குடிங்க... என்று உங்களிடம் சேல்ஸ்மேன் வேலை பார்ப்பார்கள்.

நீங்களும் டாக்டர் நம் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்று அக்கறையோடு அந்த மருந்து மாத்திரைகளை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கிறீர்கள்.
டாக்டர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் தான் ஆனால்...                             இப்போதைய கார்ப்பரேட் உலகத்தில்
தவிர்க்க முடியாத ஆசைகளால் ஒரு டாக்டரை பார்த்து இன்னொரு டாக்டர் இவ்வளவு சம்பாதிக்கிறார் என்று யோசிக்க தொடங்கும் போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட எண்ணம் தூண்டுகிறது.
முடிவுரை:
 அப்போ .. உணவே மருந்துன்னு சொன்ன நாம இப்போ  மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு அடிமையா கிடக்கிறோம்.... எப்ப நிமிர போறோம்... ??? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...